இம்சை அரசன்

கேள்விகள் தர்மசங்கடமானவை. ஆனாலும் விடை தெரிவதற்காகவே கேட்கப்படுபவை. நியாயமான முறையில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் பதில்கள் எதிர்பார்த்தே கேட்கப்படுகின்றன.

Saturday, July 15, 2006

லக்கிலுக்கின் இரட்டை வேடம்

// ஒரு வேளை அவர்களும் இரட்டை வேடம் போடுகிறார்களா? //

உன் இரட்டை வேடத்தை இங்கு கேள்வி கேட்டிருக்கிறார்கள் லக்கிலுக். http://imsay.blogspot.com/2006/07/blog-post.html அதற்கு பதில் சொல்லு முதலில். இதையும் பு.பி ஆகும் ஆசையில் வெளியிட மாட்டாயே. உனக்கு பு.பி பற்றி நையாண்டியாக எழுத என்ன தகுதி இருக்கிறது.

தமிழனின் நன்றியுணர்ச்சி

தமிழ்மண நிர்வாகி காசி அவர்களின் சுயசரிதை தொடர் சமீப காலமாக வருகிறது. தமிழ்மண உருவாக்கத்தில் அவர் பட்ட கஷ்டங்களை படிக்கும்போது பெருமையாக இருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த தொடருக்கு வரும் பின்னூட்டங்கள். முன்பு காசி காலையில் சூரியன் உதிக்கிறது என்றால் கூட ஒரு பெரிய கூட்டமே காசியண்ணா பிரமாதம் என்று பின்னூட்டம் இடுவார்கள். இப்போது பார்த்தால் யாருமே அவர் பதிவில் அவரின் கஷ்டங்களுக்கு நன்றி சொல்ல காணோம்.

இதற்கும் அவரின் சமீப அறிவிப்பிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சமீபத்தில் நாங்கள் நண்பர்கள் லால்பார்க்கில் கூடிய போது பேசிக்கொண்டோம். தமிழ்மணத்தை விற்பனை செய்துவிட்டதால் இனி காசிக்கு பின்னூட்டம் அளித்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தமிழர்கள் முடிவு செய்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. பின்னூட்டம் பெரிய அளவில் வராததற்கு வேறு நியாயமான காரணங்கள் கண்டிப்பாக இருக்கும்.

முத்து(தமிழினி) & லக்கிலுக்

எல்லா பதிவுகளிலும் சென்று பின்னூட்டங்களில் பாதி பதிவரே போட்டுக்கொள்வது என்று சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர் லக்கிலுக். என்னவோ தமிழ்மண மறுமொழி மட்டுறுத்தல் பகுதி அவர் பரம்பரை சொத்து போல் பாவித்து அப்படி கேட்பதே அதிகப்பிரசங்கித்தனம். அதிலும் அதை அவர் தனக்கு பிடிக்காதவர்கள் பதிவில் மட்டும்தான் செய்வார். அதிசயமாக நேற்று உங்கள் பதிவிலும் இங்கு இருக்கும் பின்னூட்டங்களில் பாதிக்கு மேற்பட்டவை நீங்களே எழுதிக்கொண்டது என்று இருப்பதை பார்த்ததும் பரவாயில்லை அவரிடம் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது என்று நினைத்தேன். இப்பொழுது பார்த்தால் அதை காணவில்லை. உங்கள் இமேஜுக்கு கெடுதல் என்று நீங்கள் தூக்கி விட்டீர்களா? அது தூக்கப்பட்டதற்கு லக்கிலுக் ஏன் உங்களிடம் கேள்வி எழுப்பவில்லை? இல்லை லக்கிலுக்கே அதை தூக்கியிருந்தால் அவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? நடுநிலை என்னவாயிற்று? (இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்களா?)

Update 1 :- மேற்குறிப்பிட்ட பின்னூட்டத்தை முத்து(தமிழினி) அவர்களின் பதிவில் http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post_14.html கேட்டேன். அதற்கு அவர் பதில் -

ஒரு அனானிக்கு,என் பதிவில் எந்த பின்னூட்டத்தை வெளியிடுவது,நீக்குவது என்பது என் இஷ்டம்:))தேவுடா தேவுடா

பிழைத்துக்கொள்வீர்கள் முத்து(தமிழினி) அவர்களே. உங்கள் இமேஜ் இப்பொழுதுதான் சந்தி சிரிக்கிறது.

Update 2 :- இப்பொழுது அதையும் அழித்து விட்டார். ஸ்ஸ்ஸ்ப்பா உங்க இமேஜ் பில்டிங் தாங்க முடியலைடா சாமி

வாசகன் எழுத ஆரம்பிக்கிறேன்

தமிழ்மணத்தின் நெடுநாளைய வாசகன் நான். இதுவரை எழுதியதில்லை. இப்பொழுது எழுத வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது. நிறைய கேள்விகள். முதலில் கண்களில் தென்படும் கேள்விகளை கேட்டு பிறகு பழகி பிறகு பதிவு எழுதலாம் என்று எண்ணம்.